பாப்பிரெட்டிப்பட்டி ஊருக்குள் வராத அரசு, தனியார் பஸ்களால் ஏமாற்றம்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி, தாலுகா தலைமையிடமாக உள்ளது. இதை சுற்றி, 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்கிருந்து தினமும், 1,000க்கும் மேற்-பட்டோர் பாப்பிரெட்டிப்பட்டி நகரத்துக்கு பல்வேறு வேலைக-ளுக்காகவும், தொழில் தொடர்பாகவும் வந்து செல்கின்றனர். இங்கு தாலுகா அலுவலகம், யூனியன் ஆபீஸ், கோர்ட், கருவூ-லகம், பத்திரப்பதிவு அலுவலகம், தேசிய வங்கிகள், ஜவுளி கடைகள், பள்ளி, கல்லுாரிகள் இயங்கி வருவதால் மாணவ, மாணவியர், பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாகவும் உள்ளது.இந்நிலையில் சேலம் - அரூர் என்.எச்., வழியாக பல்வேறு முக்-கிய நகரங்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி வழியாக செல்லும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும்பாலானவை பர்மிட் இருந்தும் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டுக்கு வருவதில்லை. இதனால், பாப்பிரெட்டிப்பட்டிக்கு வருவோரும், வெளியூர் செல்-வோரும் பஸ்கள் இல்லாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்-றனர். கடத்துார், பொம்மிடி பகுதியில் இருந்து திருவண்ணா-மலை, சேலம், வேலுார், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்வோர், பாப்பிரெட்டிப்பட்டி நகரில் இறங்கி, அங்கிருந்து டவுன் பஸ் மூலமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ, 2 கி.மீ., துாரம் சென்று, சாமியாபுரம் கூட்டு ரோடு பகுதிக்கு சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து செல்கிறார்கள். குறிப்பாக பாப்-பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள கோர்ட்டுகளுக்கு சேலம், வேலுார் சிறைகளிலிருந்து கைதிகளை போலீசார் பஸஅழைத்து வரும்போது, பைபாஸ் ரோட்டில் இறங்கி, அங்கிருந்து பாதுகாப்-பற்ற சூழலில் வேறு வாகனங்களில் பாப்பிரெட்டிப்பட்டி நகரப்ப-குதிக்கு கைதிகளை அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. இப்-பிரச்னைக்கு தீர்வு காண சேலம், அரூர், ஊத்தங்கரை, திருப்-பத்துார் வாணியம்பாடி, வேலுார், திருவண்ணாமலை வழித-டத்தில் செல்லும் அனைத்து பஸ்களும், பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதிக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலி-யுறுத்தி உள்ளனர்.