உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., செயற்குழு கூட்டம்

தி.மு.க., செயற்குழு கூட்டம்

காரிமங்கலம்:தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், காரி-மங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பழனியப்பன் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில், ஜூன், 3ல் கருணாநிதியின், 102வது பிறந்த நாளை, மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, நாளை, 2026 தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு, தர்மபுரிக்கு வரும் அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம் ஆகி-யோருக்கு, சிறப்பான வரவேற்பு அளிப்பது. இளைஞரணிக்கு கிளை மற்றும் வார்டுகள் தோறும் நிர்வாகிகளை நியமனம் செய்-வது. தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை புத்தகத்தை இல்லந்-தோறும் வழங்குவது. தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்-காத மத்திய, பா.ஜ., அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி