உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 8 ஆண்டுகளாக கிளைகளின்றி மஞ்சவாடி ஊராட்சி மாற்று கட்சிக்கு தாவ தயாராகும் தி.மு.க.,வினர்

8 ஆண்டுகளாக கிளைகளின்றி மஞ்சவாடி ஊராட்சி மாற்று கட்சிக்கு தாவ தயாராகும் தி.மு.க.,வினர்

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, தி.மு.க., மத்திய ஒன்றியத்திலுள்ள மஞ்சவாடி ஊராட்சியில் கிளைகள் இல்லாததால், கட்சி பணிகள், உறுப்பினர் சேர்ப்பில், தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டவில்லை. கவனிப்பு இல்லாததால் அங்குள்ள கட்சியினர் மாற்று கட்சிக்கு தாவ, தயாராகி வருகின்றனர்.இது குறித்து ஒன்றிய, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், 19 ஊராட்சிகள் உள்ளன. இதில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தை, தி.மு.க., கட்சி அமைப்பு ரீதியாக மேற்கு, கிழக்கு, மத்திய என, 3 ஒன்றியங்களாக பிரித்துள்ளனர். இதில் மேற்கு ஒன்றியத்தில், 8 ஊராட்சி, ஒரு பேரூராட்சி, மத்திய ஒன்றியத்தில், 9 ஊராட்சி, கிழக்கு ஒன்றியத்தில் மஞ்சவாடி, பட்டுகோணாம்பட்டி, சித்தேரி என, 3 ஊராட்சி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி உள்ளன. இதில், பட்டுகோணாம்பட்டியில், 17 கிளை, சித்தேரியில், 47 கிளை, மஞ்சவாடியில், 8 கிளை, என, 72 கிளைகள் இருந்தன. இதில், மஞ்சவாடி ஊராட்சியில், 2017ல் நடந்த கட்சி கிளை தேர்தலில், கட்சி பணி செய்யாதவர்களுக்கு, கிளை செயலாளர் பதவி வாய்ப்பு கொடுப்பதாக எழுந்த புகாரையடுத்து, அப்போது தேர்தல் நிறுத்தப்பட்டது.இதனால் அந்த ஊராட்சியிலுள்ள கோம்பூர், சின்னமஞ்சவாடி பெரியமஞ்சவாடி லட்சுமாபுரம், மஞ்சவாடி பாளைய நகர், கல்லாத்துப்பட்டி, நடுப்பட்டி, மஞ்சவாடி காலனி ஆகிய, 8 கிராமங்களிலும் கடந்த, 8 ஆண்டுகளாக, தி.மு.க.,வின் கிளைகள் இல்லாமல் செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், இந்த ஊராட்சியில் உறுப்பினர் சேர்ப்பது உள்ளிட்ட எந்த கட்சி பணிகளும் நடக்கவில்லை. பெயரளவுக்கு மட்டுமே கட்சி உள்ளது. பழங்குடியின மக்கள், 80 சதவீதம் பேர் உள்ள இப்பகுதியில், 6,000 ஓட்டுகள் உள்ளன. எந்த, தி.மு.க., நிர்வாகியும் ஊராட்சியை கண்டு கொள்வதில்லை. இதனால் அங்குள்ள, தி.மு.க.,வினர் பிற கட்சிகளுக்கு செல்கின்றனர். சட்டசபை தேர்தலுக்கு முன், கிளைகளை ஒழுங்கு செய்து, செயலாளர்கள் நியமித்தால் மட்டுமே, இந்த ஊராட்சியில், தி.மு.க., இருக்க வாய்ப்பு உள்ளது. இல்லையெனில், தி.மு.க.,வினர் பலர், தங்களை கவனிக்கும் கட்சிக்கு, தாவ தயாராக உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை