மேலும் செய்திகள்
தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள்
04-Mar-2026
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை வனத்துறை சோதனைச் சாவடி அருகே, கோட்டப்பட்டி எஸ்.எஸ்.ஐ.,கமல-நாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் தேரோட்டத்தை முன்னிட்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அரூரில் இருந்து வந்த பொலீரோ பிக்கப் வாக-னத்தை சோதனை செய்தனர். அதில், 1,200 சிலரி, 200 டெட்ட-னேட்டர்கள், 1,125 மீட்டர் திரி ஆகியவை இருந்தது. இது குறித்து வாகன ஓட்டுனரிடம் விசாரித்ததில், அவர், திருவண்ணா-மலை மாவட்டம், செங்கம்பட்டுவை சேர்ந்த சிலம்பரசன், 32, கம்பைநல்லுார் திருமலா வெடிமருந்து கிடங்கிலிருந்து வெடி மருந்துகள் வாங்கிக் கொண்டு, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலா வெடி மருந்து கிடங்கிற்கு உரிய அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதைய-டுத்து அவரை கைது செய்த போலீசார் பொலீரோ பிக்கப் வாகனம் மற்றும் அதிலிருந்து வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
04-Mar-2026