மின் பாதுகாப்புவிழிப்புணர்வு பேரணி
தர்மபுரி,: தேசிய மின் சிக்கன வார விழாவையொட்டி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். தர்மபுரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி முன்னிலை வகித்தார். பேரணியில், பயிர்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்ற, மின்வேலி அமைப்பது குற்றம். இடி, மின்னல் மற்றும் மழை காலங்களில் வீட்டில், 'டிவி' கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ் ஆகியவற்றின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்பன, உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, தர்மபுரி அரசுமருத்துவமனை முன் நிறைவு பெற்றது.