மேலும் செய்திகள்
திடீர் சூறாவளி காற்று: மின்கம்பங்கள் சேதம்
17-Apr-2025
பாகலுார்:ஓசூர் அருகே, பாகலுார் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால், பாகலுார் ஏரிக்குள் இருந்த இரும்பு மின்கம்பம் சாய்ந்தது. அதனால் பாகலுார், ஜீமங்கலம், உளியாளம், காளேஸ்வரம், தின்னப்பள்ளி, தாசரப்பள்ளி ஆகிய கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இரவு, 11:00 மணிக்கு மேல் மின்வாரியம் மூலம் மாற்று பாதையில் மின்வினியோகம் செய்யப்பட்டது. ஏரிக்குள் தண்ணீர் இருந்ததால், பிரத்யேக வாகனம் மூலம் சாய்ந்த மின்கம்பத்தை பிடுங்கி, மீண்டும் அதே இடத்தில் நட்டு, மேலும் இரு கம்பங்கள் மூலம் நேற்று மாலை மின்வாரியம் முட்டு கொடுத்தது. அதன் பின் மீண்டும் அவ்வழியாக மின்வினியோகம் சீரானது. சாய்ந்த இரும்பு மின்கம்பம் மிகவும் மோசமாக உள்ளது. அதையே மீண்டும் நட்டுள்ளனர். ஏரியில் தண்ணீர் குறைந்தவுடன், புதிய கம்பம் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் என, மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
17-Apr-2025