கூட்டுறவு துறையில் இன்று பணியாளர் நாள் நிகழ்வு
தர்மபுரி, தமிழக சட்டசபையில், 2024ம் ஆண்டு, ஜூன், 27ல், வரவு, செலவு திட்டம், 2024--25 கூட்டுறவு துறைக்கான மானிய கோரிக்கையின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சரால், 'அறிவிப்பு எண் -03'ன் படி, கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், 2 மாதங்களுக்கு ஒரு முறை, மண்டல அளவில், 'பணியாளர் நாள் நிகழ்வு' நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 'பணியாளர் நாள் நிகழ்வு' தர்மபுரி மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப்.12)நடக்க உள்ளது என, கூட்டுறவுத்துறையின் தர்மபுரி இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.