உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு தர்மபுரி, டிச. 29-தர்மபுரி மாவட்டம், அக்குமனஹள்ளி பஞ்., குன்செட்டிஹள்ளியை சேர்ந்த விவசாயி தங்கவேல், 65. இவர் கடந்த, 16 அன்று அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, வரப்பிலிருந்து தவறி விழுந்தார். இதில், வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர், 27 அன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு இறந்தார். இது குறித்து, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ