கார் மோதி விவசாயி பலி
கார் மோதி விவசாயி பலிதொப்பூர், டிச. 21-தர்மபுரி மாவட்டம், டொக்குபோதனஹள்ளி குறிஞ்சி நகரை சேர்ந்த விவசாயி வடிவேல்,43. இவர் கடந்த, 18 அன்று மாலை, 5:30 மணிக்கு தொம்பரக்காம்பட்டியில் சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, தர்மபுரி நோக்கி வந்த, மாருதி கார் வடிவேல் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வடிவேல் இறந்து விட்டதாக தெரிவித்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.