உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓட்டல், டீ கடைக்கு அபராதம்

ஓட்டல், டீ கடைக்கு அபராதம்

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவின் படி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள, ஓட்டல்கள், துரித உணவகம், பேக்கரி மற்றும் டீ கடைகளில், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள், அச்சிடப்பட்ட செய்தி தாள்களில் எண்ணெய் பலகாரங்கள் வினியோகம் செய்வது குறித்து, தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். அதில், அச்சிடப்பட்ட செய்தி தாள்களில் பலகாரம் காட்சி படுத்தியதுடன், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்கள் பரிமாறியது தெரியவந்தது. மேலும், ஓட்டலில் செயற்கை நிறமூட்டி கன்டெய்னர் பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு, 2,000 ரூபாய் மற்றும், 3 டீ கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை