உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பர்னிச்சர் கடையில் தீ விபத்து

பர்னிச்சர் கடையில் தீ விபத்து

பாலக்கோடு: பாலக்கோட்டிலுள்ள, பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், -50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பொருட்கள் எரிந்து நாசமாகின.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி சந்தை அருகே, கார்த்திக் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் விற்பனைக்காக கடையை திறந்து வைத்தார்.அப்போது, கட்டில் மெத்தை உள்ளிட்ட பொருட்கள் இருந்த பகு-தியில், தீ பற்றி அடர்ந்த புகை வருவதை கண்ட கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அக்கம் பக்கத்தினர் உதவி-யோடு தீயை அணைக்க முயன்றனர். ஆனால், சிறிது நேரத்தில் பர்னிச்சர் கடை முழுவதும் தீ வேகமாக பரவியது.பாலக்கோடு மற்றும் தர்மபுரி தீயணைப்பு துறையினர் வந்து தண்-ணீரை பீய்ச்சியடித்து, 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த கட்டில், மெத்தை, பீரோ உட்பட, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ