உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / என்.எஸ்.எஸ்., முகாமில் தீ தடுப்பு விழிப்புணர்வு

என்.எஸ்.எஸ்., முகாமில் தீ தடுப்பு விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த காளிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. இதில் பாப்பிரெட்-டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவமழை மற்றும் ஆரம்ப கட்ட தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நிலைய அலுவலர் (பொ) செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பொது இடங்கள், மலை பகுதிகளிலுள்ள இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால், பதற்றம் அடையாமல் அருகிலுள்ள மணல், தண்ணீர் மற்றும் தீ அணைப்பான் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தல், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, முதலுதவி செய்தல், தீயணைப்பு உபகரணங்கள் பராமரித்தல் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், தீ விபத்து குறித்து, தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !