உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு

நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு

நீரோடைகளில் வெள்ளப் பெருக்குதர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, பையர்நாயக்கன்பட்டி, தீர்த்தமலை, வேப்பம்பட்டி, கீரைப்பட்டி, வாச்சாத்தி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சித்தேரி, நவலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை முதல், பகல், 12:30 மணி வரை, விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்தது. கனமழையால் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரம்பியது. மேலும், நரிப்பள்ளி கல்லாறு, கோட்டப்பட்டி அடுத்த செலம்பை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல், சிட்லிங், கலசப்பாடி, வாச்சாத்தி, கூக்கடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள காட்டாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. அரூரில், நான்குரோடு, திரு.வி.க., நகர், சேலம் பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை