நான்கு இறைச்சி கடைகளுக்கு அபராதம்
அரூர் :தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் அறிவுறுத்தல்படி, உணவு பாதுகாப்பு அலுவலர் அருண், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஆடு, மாடு, மீன், கோழி மற்றும் பன்றி இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட நான்கு கடைகளுக்கு, தலா, 1,000 ரூபாய் வீதம் மொத்தம், 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், விதி மீறல்களுக்கு உள்ளாகும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம், 2006ன் படி அபராதமும், கடுமையான தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.