இலவச வீட்டுமனை பட்டா; இருளர் இன மக்கள் மனு
தர்மபுரி, நவ. 12-கரிகுட்டனுாரை சேர்ந்த, இருளர் மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, திருமல்வாடி கரிகுட்டனுாரில், 80க்கும் மேற்பட்ட பழங்குடியின இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா இதுவரை வழங்கவில்லை.இது குறித்து பலமுறை மனு அளித்தும், பட்டா வழங்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதிக்கு வரும் சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. மழை காலங்களில் எங்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இலவச வீட்டுமனை பட்டா வழங்க, கடந்த, 2 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். எனவே, எங்கள் பகுதி பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.