வெற்றி ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள் தர்மபுரியில் இலவச கருத்தரங்கம்
தர்மபுரி: 'வெற்றி ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள்' சார்பில், இலவச கருத்த-ரங்கம், தர்மபுரி டவுன் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள் நிர்வாக இயக்குனர் சண்முகம் தலைமை வகித்தார். சேலம் மற்றும் தர்மபுரி மண்டல இயக்-குனர் எட்டப்பன், கிருஷ்ணகிரி மண்டல இயக்குனர் சாதிக், வெற்றி நீட் கேட்வே தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.இதில், ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிளில் பயிற்சி பெற்று, தற்போது, பல்வேறு அரசு பதவிகளில் உள்ளவர்கள், கருத்தரங்கில் கலந்து கொண்டு, தேர்வில் தங்ளுடைய அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை எதிர்-கொள்வது குறித்து எடுத்து கூறினர். மேலும், பயிற்சிக்கு தயா-ராகும் மாணவர்களுக்கு, 'வெற்றி ஐ.ஏ.எஸ்., அகாடமி' மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் தேர்வு முறைகள் குறித்தும் தெளிவாக எடுத்து கூறினர். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்க-ளுக்கும் பொது தமிழ் புத்தகம், ஆறு மாத நடப்பு நிகழ்வு புத்-தகம் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், கருத்தரங்கில் கலந்து கொண்டு, அகாடமியில் சேர்ந்தவர்களுக்கு, 50 சதவீத கட்-டண சலுகை வழங்கப்பட்டது. இதில், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பலர் கலந்து கொண்டனர்.