உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ஆர்வமுள்ள தமிழக மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கம்

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ஆர்வமுள்ள தமிழக மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கம்

தர்மபுரி, அண்மையில் நடந்து முடித்த நீட் தேர்வை, 1.50 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில், 11,000 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மருத்துவராக வேண்டும் என்பது ஒவ்வொரு மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் கனவாக இருக்கும். இந்தாண்டு நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், தமிழகத்தில் மருத்துவம் படிக்க சீட் கிடைக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனர். ஆகையால் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க, தமிழக மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கலாமா, எந்த நாட்டை தேர்வு செய்வது என்ற குழப்பங்களுடன் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக, லிம்ரா நிறுவனம் இலவச கருத்தரங்கத்தை நடத்துகிறது.லிம்ரா ஓவர்சீஸ் நிறுவனம் சென்னையில், 23 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டில் மாணவர்கள் கல்வி பயில, குறிப்பாக மருத்துவக் கல்வியை மேற்கொள்ள, இந்நிறுவனம் வழிகாட்டி வருகிறது. இதுவரை, 1,850 மருத்துவர்களை, வெளிநாட்டு மருத்துவக் கல்லுாரிகள் மூலமாக உருவாக்கி உள்ளது. விம்ராவின் மற்றொரு நிறுவனமான லைம் பயிற்சி மையம், 12 ஆண்டுகளாக வெளிநாட்டில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு, எப்.எம்.ஜி.இ., பயிற்சி அளித்து வருகிறது. 2024 டிச.,ல் நடந்த எப்.எம்.ஜி.இ., தேர்வில், 81 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். ‍வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது, மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பானதா, அதற்கு எந்தெந்த நாடுகள் ஏற்றதாக இருக்கும், நீட் தேவையா, பிளஸ் 2 தேர்வில் எந்தெந்த பாடப் பிரிவுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்-, முக்கியமாக மாணவர்கள் பாதுகாப்பு பற்றிய சந்தேகம் தான் பெற்றோர்களுக்கு முதலில் தோன்றும். படிக்க எவ்வளவு செலவாகும். தற்போது, என்.எம்.சி., விதிமுறைகள் என்னென்ன, அதை பின்பற்றும் வெளிநாடுகள் எவை, எத்தனை ஆண்டுகள் மருத்துவம் பயில வேண்டும், வெளிநாட்டில், எம்.பி.பி.எஸ்., படித்த தமிழக மாணவர்கள், அரசு மருத்துவராக பணியற்ற முடியுமா, இதுபோன்ற கேள்விகளுக்கு, இக்கருத்தரங்கில் பங்கேற்று தீர்வு காணலாம்.அதன் படி, மாணவ, மாணவிருக்கான இலவச கருத்தரங்கம், நாளை, 7ம் தேதி சனிக்கிழமை, 11:00 மணியளவில், கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, பெங்களூரு சாலையிலுள்ள ஓட்டல் ஆர்.கே.வி., ரெசிடென்சியில் நடக்கிறது. அன்று மாலை, 4:30 மணிக்கு, தர்மபுரியில், பைபாஸ் சாலையிலுள்ள, ஓட்டல் அதியமான் பேலஸ்ல் நடக்க உள்ளது. தொடர்புக்கு, -94457 83333, 99529 22333, 94454 83333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ