பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி 25 ஆட்டோக்களில் இலவச பயணம்
தர்மபுரி :பாரத பிரதமர் நரேந்திர மோடியின், 75வது பிறந்தநாளை, தர்மபுரி மாவட்டத்தில், பா.ஜ.,வினர் நேற்று கொண்டாடினர்.இதில், தர்மபுரி நகர, பா.ஜ., தலைவர் சாய் ஆறுமுகம் தலைமையில், 25 ஆட்டோக்கள் மூலம், நான்கு ரோடு பகுதியில் இருந்து, ஒட்டபட்டி வரை, காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பொதுமக்களுக்கான இலவச ஆட்டோ பயணத்தை, அவர் தொடங்கி வைத்தார். இதில், அரசு மருத்துவமனை மற்றும் கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று மக்கள் பயனடைந்தனர்.* மொரப்பூர் பஸ் ஸ்டாண்டில், மொரப்பூர் கிழக்கு மண்டல், பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மண்டல் தலைவர் சரவணன் தலைமை வகித்தார், விழாவில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.