உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுதந்திர போராட்ட தியாகிகள் குறைதீர் நாள் கூட்டம்

சுதந்திர போராட்ட தியாகிகள் குறைதீர் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சிறப்பு குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது.இதில் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுதாரர்கள் வீட்டுமனைபட்டா, வாரிசு சான்றிதழ்கள், இலவச பஸ் பயண அட்டை, கியாஸ் இணைப்பு, அரசு வேலை வாய்ப்பு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வரிசுதாரர்களுக்கான அடையாள அட்டை என, 20க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் அலுவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ