மேலும் செய்திகள்
வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.1.22 லட்சம் மோசடி
09-Jan-2025
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த ராமனுாரை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் புகழேந்தி, 25. தந்தையின் அரிசி அரவை ஆலையில், அவருக்கு உதவியாக இருந்து வந்தார். கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் ஆலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உறவினர்கள் புகழேந்தியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, பென்னாகரம் - தர்மபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, பாப்பாரப்பட்டி போலீசார் புகழேந்தியின் நண்பரான கவுரிசெட்டிப்பட்டியை பகுதியை சேர்ந்த சதீஷ், 25, என்பரை பிடித்து விசாரித்தனர்.அதில், புகழேந்தி, சதீஷ் இருவரும் நண்பர்கள். கடந்த, சில வருடங்களுக்கு முன், புகழேந்தியை தர்மபுரியிலுள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர், ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்தை, வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார்.அதை வைத்து புகழேந்திக்கு வெவ்வேறு மொபைல் எண்களில் இருந்து பேசி, மிரட்டி பணம் பறித்துள்ளார். வீட்டிற்கு தெரியாமல் பல இடங்களில் கடன் பெற்று, இதுவரை, 7 லட்சம் ரூபாயை புகழேந்தி ஆன்லைன் மூலம், சதீஷிற்கு அனுப்பி வந்துள்ளார். அந்த பணத்தில் சதீஷ், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டும், வெளியூர் களுக்கு சுற்றுலா சென்றும் செலவு செய்துள்ளார். இந்நிலையில், புகழேந்தி பல இடங்களில் கடன் பெற்றது வீட்டிற்கு தெரிய வரவே, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, பாப்பாரப்பட்டி போலீசார், சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
09-Jan-2025