விநாயகர் சிலை விற்பனை மும்முரம்
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடியில் களிமண் மற்றும் பேப்பர் கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இதில், 2 அடிக்கு மேல் உள்ள சிலைகள் ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படுகிறது. பொம்மிடி - தர்மபுரி மெயின் ரோட்டில் சிறிய ரக சிலைகள் முதல் பெரிய அளவிலான சிலைகள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறிய அளவிலான சிலைகளை குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். இங்கு, 100 ரூபாய் முதல், 15,000 ரூபாய் வரை சிலைகள் விற்கப்படுகிறது.