நாட்டு வெடி வெடித்ததில் சிறுமி பலி; இருவர் கைது
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, நாட்டு வெடி வெடித்ததில், சிறுமி இறந்த விவகாரத்தில், வீட்டின் உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டத்ததை சேர்ந்த அபி, 28, நாகவேணி,25, இந்த தம்பதியின் மகள் கவிநிலா, 6, பொங்கல் பண்டிகையை முன்-னிட்டு, காரிமங்கலம் அடுத்த பெரியபுதூரில் உள்ள அவரது பாட்டி வள்ளி, 50, வீட்டிற்கு சென்றார். இதில், பாட்டி வள்ளி மற்றும் கவிநிலா இருவரும் உறவினரான தருமன், 47, வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு கவிநிலா, வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென நாட்டு வெடிகள் வெடித்ததில், உடல் சிதறி கவிநிலா சம்பவ இடத்தில் இறந்தார். காரிமங்கலம் போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, தடயவியல் நிபுணர்களை வரவ-ழைத்து விசாரணை செய்தனர். இதில், வீட்டின் உரிமையாளர் தருமன் அவரது மருமகன் கிருஷ்ணன், 30, ஆகிய இருவரும் கடைகளில் நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகளை வாங்கி வந்து, அதில், கூடுதலாக வெடி மருந்துகளை சேர்த்து, காட்டு பன்றிகளை கொல்ல பயன்படுத்தும் நபர்களுக்கு விற்பனை செய்-துள்ளனர். இதில், வெடி மருந்துகளை கூடுதலாக வீட்டின் மொட்டை மாடியில் பதுக்கி வைத்துளள்னர். சிறுமி விளையாடிய போது வெடித்ததில், அவர் பலியானது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் தருமன் அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய இரு-வரையும் நேற்று கைது செய்தனர். மேலும், காட்டு பன்றிகளை கொல்ல பயன்படுத்தும் வெடி மருந்து விற்பனை செய்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.