உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேனீக்கள் கொட்டி ஆடு வியாபாரி சாவு

தேனீக்கள் கொட்டி ஆடு வியாபாரி சாவு

தேனீக்கள் கொட்டி ஆடு வியாபாரி சாவுகிருஷ்ணகிரி, நவ. 22-வேப்பனஹள்ளி அடுத்த தங்காடிகுப்பத்தை சேர்ந்த ஆடு வியாபாரி சையத் பாஷா, 60. நேற்று மாலை சிரனப்பள்ளியில், மஞ்சு என்பவரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு, குடும்பத்தாருடன் மஞ்சு, ஆடு வெட்டி பூஜை செய்தார். அங்கு ஒரு மரத்தின் கூட்டிலிருந்து வெளியேறிய தேனீக்கள், அங்கிருந்தவர்களை கொட்டின. இதில் சையத் பாஷா அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி