தர்மபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது
தர்மபுரி :தர்மபுரி மாவட்டத்தில், 8 அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒரு தனியார் பள்ளி முதல்வர் ஆகியோரின் சிறந்த கல்வி சேவைக்காக, 2025ம் ஆண்டின் தமிழக அரசின் 'நல்லாசியர் விருது'க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், ஆயாமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை எழிலரசி, பென்னாகரம் ஒன்றியம், குழிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தசாமி, பாலக்கோடு ஒன்றியம், கெங்கனஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சரவணன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பையர்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் வெங்கடாசலம், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, கோணங்கிநாயக்கனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் ராமகிருஷ்ணன், இராமகொண்டஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் சுப்ரமணி, மாரண்டஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலையாசிரியர் மணிவண்ணன் மற்றும் தனியார் பள்ளியான தர்மபுரி வாரியார் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் சுரேஷ்குமார் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவருக்கும், இன்று சென்னையில் நடக்கும் ஆசிரியர் தினவிழாவில், நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.