காலமுறை ஊதியம் வழங்க அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
காலமுறை ஊதியம் வழங்கஅரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்தர்மபுரி, அக். 10-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நல்லம்பள்ளி வட்ட, 15வது மாநாடு நல்லம்பள்ளி ஒன்றிய குழு மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில், வட்ட தலைவர் யாரப்பாஷா தலைமை வகித்தார். வட்ட இணைசெயலாளர் ஆனந்தன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தெய்வானை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் சுருளிநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் பேசினர்.இதில், 21 மாத கால நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நுாலகர்கள். எம்.ஆர்.பி., செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும், 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.அரசு துறைகளிலுள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள், 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த, 25 சதவீதம் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். சத்துணவு துறையில் பணிபுரியும் ஊழியர்களின் மறைவிற்கு பின், கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுக்கு, பணி வழங்க மறுக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.