உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு திட்ட சிறப்பு முகாம்

அரசு திட்ட சிறப்பு முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சித்தேரி ஊராட்சியில் பழங்குடியினருக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. தனி தாசில்தார் ஜெயசெல்வன் தலைமை வகித்தார். இதில் மத்திய, மாநில அரசால் பழங்குடியினருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து மக்களிடையே எடுத்து கூறப்பட்டது. முகாமில் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், ஆதார் திருத்தம், நலவாரிய அட்டை, கறவை மாடுகள் வீடுகள், ஆழ்துளை கிணறு, பி.எம்.கிஷான் நில உட்பிரிவு உள்ளிட்டவைகள் வேண்டி, 157 மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் வி.ஏ.ஓ.,க்கள் தினகரன், சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி