மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
25-Dec-2024
கடத்துார் : தர்மபுரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., பசுமை தாயகம் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடத்துார் அடுத்த ஒடசல்பட்டி கணவாய் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மாவட்ட தலைவர் அருள் தலைமையில் நடந்தது. பா.ம.க., மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞர் சங்க மாநில செயலாளர் செந்தில், பசுமை தாயக மாநில துணைச்செயலாளர் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி பசுமை தாயகத்தின் பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் பசுமை தாயகத்தின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பசுமை தாயத்தின் மாவட்ட துணைச்செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
25-Dec-2024