உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு தொடக்கப்பள்ளியில் மகிழ்முற்றம் தொடக்கம்

அரசு தொடக்கப்பள்ளியில் மகிழ்முற்றம் தொடக்கம்

அரசு தொடக்கப்பள்ளியில் 'மகிழ்முற்றம்' தொடக்கம்தர்மபுரி, நவ. 17-தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, அவர்களது பள்ளி வருகையை உறுதிபடுத்த, மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க 'மகிழ்முற்றம்' அமைப்பை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளி பஞ்., உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 'மகிழ்முற்றம்' அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, 5 வகை அணிகளாக பிரிக்கப்பட்டு, அணிகளுக்கு பொறுப்பு மாணவ தலைவர்கள், குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. குழுக்களின் அணி பொறுப்பாசிரியர்களான மகாலட்சுமி, கார்மல் ஜெயப்பிரியா, ஆசிரியர்கள் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மாணவ, மாணவியருக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ