உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

அரூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெரியப்பட்டி, பையர்நாயக்கன்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதிகபட்சமாக பெரியப்பட்டியில், 71.2 மி.மீ., மழை பதிவானது. நேற்று முன்தினம் பெய்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை