உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / துப்பாக்கி குண்டு பாய்ந்து வேட்டைக்கு சென்றவர் காயம்

துப்பாக்கி குண்டு பாய்ந்து வேட்டைக்கு சென்றவர் காயம்

அரூர் :அரூர் அருகே, துப்பாக்கி குண்டு பாய்ந்து, வேட்டைக்கு சென்றவர் படுகாயம் அடைந்தார்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கலசப்பாடியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 51; இவர், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி மூலம், தொங்கலுத்து வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட சென்றுள்ளார். அப்போது, நாட்டுத் துப்பாக்கியில், பால்ரஸ் குண்டுகளை நிரப்பி சரிப்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி வெடித்தது. இதில், கிருஷ்ணனின் இடது கை விரல்களில், 7 குண்டும், இடது பக்க மார்பில், ஒரு குண்டும் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை அவரது மகன் செல்லப்பன் அரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கீழே தவறி விழுந்ததில், காயம் ஏற்பட்டதாக மருத்துவரிடம் கூறியுள்ளார். பின், எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவரது உடலில் கை விரல்கள் மற்றும் மார்பில் பால்ரஸ் குண்டுகள் இருந்தது தெரிய வந்தது. அரூர் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ