உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குழந்தையை கொன்று தாய் தற்கொலை வழக்கில் கணவர், மாமியார் கைது

குழந்தையை கொன்று தாய் தற்கொலை வழக்கில் கணவர், மாமியார் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி வடசந்தையூரை சேர்ந்தவர் அக்பர், 27; போட்டோ ஸ்டுடியோ ஊழியர். இவரது மனைவி தஸ்லீம்பானு, 20. தம்பதியின், 9 மாத ஆண் குழந்தை ஆத்தீப். தம்பதிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறில், மஞ்சவாடியிலுள்ள தன் தாய் வீட்டிற்கு சென்ற தஸ்லீம்பானு, கடந்த சில நாட்களுக்கு முன், கணவர் வீட்டுக்கு வந்தார். கடந்த, 7ல் மாலை வீட்டிற்கு அக்பர் வந்தபோது, வீடு உட்புறம் பூட்டப்பட்டு இருந்தது. கதவு சந்தில் பார்த்தபோது, தஸ்லீம்பானு துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தை ஆத்திப்பின் இடது கை மணிக்கட்டு பிளேடால் அறுக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்து கிடந்தது. தஸ்லீம்பானு தன் இரு கைகளிலும் பிளேடால் அறுத்துக் கொண்டு, துாக்கு போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து, பொம்மிடி போலீசார் சந்தேக மரணம் என, வழக்குப்பதிந்து, அரூர் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு அனுப்பினர். விசாரணை முடிந்து, அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், தஸ்லீம்பானுவின் கணவர் அக்பர், 27, மாமியார் அமிதா, 45, ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தார். நேற்று தஸ்லீம்பானுவை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிந்து அக்பர், 27, நமீதா, 45 ஆகியோரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ