கணவன் கொலை மனைவிக்கு ஆயுள்
கணவன் கொலைமனைவிக்கு ஆயுள்தர்மபுரி, நவ. 8-தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகே மேல்ஆண்டிஹள்ளியை சேர்ந்தவர் முனியப்பன், 32. இவர் மனைவி கீதா, 32. இவர்களுக்கு, 3 பெண் குழந்தைகள். தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளளது. கடந்த, மார்ச், 2020ல் ஏற்பட்ட தகராறில், கீதா தனது கணவர் முனியப்பனை கொலை செய்துள்ளார். கிருஷ்ணாபுரம் போலீசார் கீதாவை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி கட்ட விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், குற்றவாளி கீதா கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.