மேலும் செய்திகள்
வெற்றிலை விலை உயர்வு
12-May-2025
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிலை வாரச்சந்தை நடக்கிறது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். இங்கு மணியம்பாடி உள்ளிட்ட, 20க்கும் மேற்-பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றி-லையின் ஆரம்ப விலை 4,000 முதல் அதிகபட்சமாக, 10,000 ரூபாய் வரையில் விற்பனையானது. நேற்று நடந்த வாரச்சந்-தையில் ஆரம்ப விலை, 2,000 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 6,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, 4,000 ரூபாய் விலை குறைந்தது.வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. 25க்கும் மேற்-பட்ட மூட்டைகள், 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
12-May-2025