பாலக்கோடு பேரூராட்சி ஆபீசில் சுதந்திர தின விழா
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில், 79வது சுதந்திர தின விழா நேற்று நடந்தது. தலைவர் முரளி தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவர் இந்துமதி முன்னிலை வகித்தார். சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் தேசபற்று குறித்து பேசினர். அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கைளை வழங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் , துப்புரவு ஆய்வாளர் , கவுன்சிலர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.