உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

தர்மபுரி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 8ம் ஆண்டு நினைவு தினம், அ.தி.மு.க., சார்பில், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர்.* அரூர் பஸ் ஸ்டாண்டில் அலங்கரித்த ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு, அரூர், எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமையில், அக்கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.* கடத்துாரில், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தலைமையிலும், பாப்பிரெட்டிபட்டியில், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையிலும், ஜெயலலிதா உருவ படத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். இதே‍போல் பொம்மிடியிலும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை