மேலும் செய்திகள்
வத்தல் மலையில் மண் சரிவு சாலையில் உருண்ட பாறைகள்
02-Dec-2024
தர்மபுரி: வத்தல்மலையில் பெய்த கனமழையால் மொத்தம், 15 கொண்டை ஊசி வளைவுகளில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்தின்றி, 10 கிராம மக்கள் முடங்கி உள்ளனர்.தர்மபுரி மாவட்டம், கொண்டகரஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வத்தல்மலையில் பால்சிலம்பு, சின்னாங்காடு, ஒன்றியங்காடு, பெரியூர், நாயக்கனுார் உட்பட, 10 மலை கிராமங்கள் உள்ளன. இதில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைபாலம் அடித்து செல்லப்பட்டு, சாலை துண்டிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதை தமிழக துணை முதல்வர் உதயநிதி, நேற்று முன்தினம் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தற்காலிக பாலம் அமைக்கும் பணியை விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.அதன்படி நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வத்தல்மலையின், 24 கொண்டை ஊசி வளைவுகளில், 7 முதல், 13 வரையிலான கொண்டை ஊசி வளைவுகளில், அதிக மண் சரிவும், 18 முதல், 22 வரையிலான கொண்டை ஊசி வளைவுகளில் பெரிய அளவிலான பாறைகள் சரிவும் என மொத்தம், 15 கொண்டை ஊசி வளைவுகளில், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு சீரமைப்பு பணி நடக்கிறது. இப்பணி தாமதத்தால், வத்தல்மலைக்கான போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், 10 கிராம மக்கள் முடங்கி உள்ளனர்.
02-Dec-2024