உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 2ம் நிலை காவலர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு பணி

2ம் நிலை காவலர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு பணி

தர்மபுரி: 2ம் நிலை காவலராக தேர்வான, 100 பேருக்கு சான்றிதழ் சரிபார்த்தல் முகாம், நேற்று தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.தர்மபுரி மாவட்டத்தில், 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு, கடந்தாண்டு டிச., மாதம் நடந்தது. இதில், 10,990 பேர் தேர்வெழுதினர். தொடர்ந்து, உடல் தகுதி தேர்வில், 695 பேர் தேர்வான நிலையில், இறுதி கட்ட தேர்வுகளில், 100 பேர், 2ம் நிலை காவலராக தேர்வாகினர். தேர்வானவர்களின் கைரேகை பதிவு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் உடல் பரிசோதனை உள்ளிட்டவை நேற்று, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை