உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாரடைப்பால் லாரி டிரைவர் சாவு

மாரடைப்பால் லாரி டிரைவர் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி, அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வரதராஜன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 59. லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து லோடு ஏற்றிக் கொண்டு சென்னைக்கு, சேலம் வழியாக சென்றார். நேற்று அதிகாலை சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில், சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு, மனைவி வசந்திக்கு போன் செய்தார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார். வசந்தி, தன் மகன் மூலம் அவ்வழியே வந்த டிரைவர் ரவி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். ரவி சென்று பார்த்தபோது, குப்புசாமி நெஞ்சுவலியால் உயிரிழந்தது தெரியவந்தது. பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை