மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு
22-Dec-2025
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டாரத்தில் கடும் குளிர் மற்றும் வரும் பொங்கல் பண்டிகை எதிரொலியால் விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை வாங்கி வைத்து, பொங்கலையொட்டி நடக்கும் சந்தையில் நல்ல விலைக்கு விற்கும் நோக்கில் ஆடுகளை வாரச்சந்தைக்கு விற்ப-னைக்கு கொண்டு வராமல் உள்ளனர். இதனால் தொடர்ந்து, 2வது வாரமாக நேற்று கூடிய போச்-சம்பள்ளி வாரச்சந்தைக்கு, 500க்கும் குறைவான ஆடுகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்ப-னைக்கு கொண்டு வந்திருந்தனர்.ஆடுகளை வாங்க அதிகாலை முதலே வியாபா-ரிகள் குவிந்த நிலையில், ஆடுகள் விற்பனை ஜரூராக நடந்தது. இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகள், 9 மணிக்குள் விற்று தீர்ந்தது. இதனால் பலர் ஆடு கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். இதனால் போச்சம்பள்ளி ஆட்டுச்சந்தை நேற்று வெறிச்-சோடி காணப்பட்டது.
22-Dec-2025