மா.கம்யூ., கட்சி கிளை மாநாடு
பென்னாகரம்: ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலையில், மா.கம்யூ., கட்சியின் கிளை மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டிற்கு அப்பகுதியை சேர்ந்த சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாநாட்டை பற்றி விளக்கமாக பேசினார். முடிவில், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும். பரிசல் ஓட்டிகளுக்கு முறையாக உரிமத்தை புதுப்பித்து, புதிய உரிமத்தை வழங்க வேண்டும். சமையல் செய்பவர்களுக்கு முறையான இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.