மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
பாப்பாரப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மந்திரிகவுண்டர் தெருவை சேர்ந்த பம்பை அடிக்கும் தொழில் செய்து வந்தவர் பாலாஜி,22. இவர் கடந்த, 18 இரவு, 10:15 மணிக்கு திருமல்வாடியில் இருந்து, பிக்கிலிக்கு பைக்கில் சென்றார். அப்போது, திருமல்வாடி- பிக்கிலி பிரிவு சாலையின் நடுவில் உள்ள புளிய மரத்தின் அருகில் படுத்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட, 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை, ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார். இது குறித்து பாலாஜி, போலீஸ் அவசர உதவி எண், 100 மற்றும் பெண்கள் பாதுகாப்பு எண், 181ல் அளித்த தகவல்படி, அங்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த பென்னாகரம் தாலுகா, பிக்கிலி கிராமத்தை சேர்ந்த கணேசன்,35, என்பவரை பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.