உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு

மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தமாணிகோம்பை சேர்ந்தவர் பழனிசாமி, 68. இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் கடந்த, 27ல் இரவு, 11:50 மணிக்கு தன் பெப் ஸ்கூட்டியில், மகனை அழைத்து செல்ல, பாப்பிரெட்டிப்பட்டிக்கு வந்தார். பாப்பிரெட்டிப்ப்டி - தமாணிகோம்பை பிரிவு சாலையில் வரும் போது, குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்தவரை, சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை