உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தின்னகுட்லஹள்ளி கிராமத்திலுள்ள, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.பாலக்கோடு அடுத்த தின்னகுட்லஹள்ளியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று, கலச ஆராதனை, நவகிரக ஹோமம், 4 கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, யாகசாலையிலிருந்து புனிதநீர் கலச தீர்த்தம் எடுத்து சென்று, கோயில் கோபுரத்திலுள்ள கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதை, இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை