சாமந்தி பூ விலை உயர்வு
அரூர்:அரூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ஆயுத பூஜை வருவதால், சாமந்தி பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும். இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் சாமந்தி பூவை சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் வரை, ஒரு கிலோ சாமந்தி பூக்களை வியாபாரிகள் கிலோ, 15 முதல், 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். ஆயுத பூஜையையொட்டி நேற்று, ஒரு கிலோ சாமந்தி, 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மீண்டும், சாமந்தி பூவின் விலை குறைந்து விடும். போதிய விலை இல்லாததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இருந்த போதிலும், பூ கடைகளில், ஒரு கிலோ சாமந்தி பூ, 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.