உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மிகவும் பழமையான வர்ணீஸ்-வரர் கோவில் உள்ளது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்-பட்ட, இக்கோவில் அருகிலுள்ள ராஜகால்வாயில் கழிவுநீர் தேங்கியுள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்படும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழி, ஆடு மற்றும் மாடு ஆகியவற்றின் இறைச்சி கழிவுகள் ராஜகால்வாயில் கொட்டப்படுவதால், அப்பகுதி யில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி படுகின்றனர். எனவே, சுகாதார கேடு ஏற்படும் வகையில், நடந்து கொள்ளும் இறைச்சி கடைக்காரர்கள் மீது, அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை