உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாக்கடைகளில் இறைச்சி கழிவு: சுகாதாரம் கெடுவதாக புகார்

சாக்கடைகளில் இறைச்சி கழிவு: சுகாதாரம் கெடுவதாக புகார்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணி தலைமை வகித்தார்.கூட்டத்தில், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க, மாநில பொது செயலாளர் சந்திரமோகன் பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்ட ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு கலப்பட முறையில், பட்டாணி பருப்பை கலந்து, துாசிகளுடன், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான துவரம் பருப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் கழிவறை சுத்தம் செய்யாமல், துர்நாற்றம் வீசுகிறது. கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில், ஆட்டிறைச்சி, மாட்டு இறைச்சி மூலம் வரும் கழிவுகளையும், ரத்தத்தையும், சாலைகளிலும், சாக்கடைகளிலும் விடுவதால் நோய் தொற்று ஏற்படுகிறது. இதை நகராட்சி அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி பழைய மற்றும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பல ஆண்டுகாலமாக வாடகை கட்டாமல் உள்ளவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து, வாடகை பாக்கியை வசூல் செய்ய வேண்டும்,'' என்றார். பின் இது குறித்து மனு அளித்தார்.மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபிநாத், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை