உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனப்பகுதியில் மருத்துவ கழிவுகள்

வனப்பகுதியில் மருத்துவ கழிவுகள்

நல்லம்பள்ளி, நல்லம்பள்ளி அருகே, வனப்பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், வன விலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, நாகர்கூடல் பஞ்., ஒட்டிய வனப்பகுதி பென்னாகரம், ஏரியூர், ஒகேனக்கல் தொடர்ச்சியாக, மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியுடன் இணைகிறது. இதில், மான், காட்டுப்பன்றி, முயல் மற்றும் அதிகளவில் மயில்கள் உள்ளது. நாகர்கூடல் பஞ்.,ல் ராமர்கூடல் வழியாக, பண்டஹள்ளி செல்லும் சாலையில், வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் ஆங்காங்கே, மருத்துவ கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளன. இதனால், வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவ கழிவுகள் மற்றும் மது பாட்டில்களை வீசி செல்லும் நபர்கள் மீது, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ளதை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !