உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழா

நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழா

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியிலுள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் மகளிர் கல்லுாரி 13வது பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்து பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்து பேசினார். கல்லுாரி துணைத்தலைவர் தீபக் வரவேற்றார். தாளாளர் செல்வி மணிவண்ணன், செயலாளர் ராம்குமார், கல்லுாரி நிர்வாக அலுவலர் விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் மகளிர் கல்லுாரி முதல்வர் பாலசுந்தரம், கல்வியியல் கல்லுாரி முதல்வர்கள் ஷாகின் பானு, கவுரிசங்கர் அறிக்கை வாசித்தனர். பேராசிரியர்கள் தங்கப்பதக்கம் மற்றும் தரவரிசை பட்டியலில் சாதனை படைத்த மாணவியர் பற்றிய விபரங்களை அறிவித்தனர்.விழாவில் சந்திராயன் மற்றும் மங்கள்யான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பட்டங்களை வழங்கி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவியருக்கு ஆலோசனைகள் வழங்கினார். விழாவில், பல்கலைக்கழக அளவில் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்த மாணவியர், தரவரிசை பட்டியலில் பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்த மாணவியர் உட்பட, கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளை சேர்ந்த, 1,500 மாணவியர் பட்டம் பெற்றனர். விழாவில் கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி