த.வெ.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில், கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில், த.வெ.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.வடக்கு ஒன்றிய செயலர் வழக்கறிஞர் ராமதுரை, தெற்கு ஒன்-றிய செயலர் தினேஷ் கண்ணன், நகர செயலர் ரமேஷ் தலைமை வகித்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலர் முரளிவிஜய் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் வழங்கினார்.