உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வரி செலுத்தாமல் சென்ற ஆம்னி பஸ்கள் ரூ.1.77 லட்சம் வசூல் செய்த அதிகாரிகள்

வரி செலுத்தாமல் சென்ற ஆம்னி பஸ்கள் ரூ.1.77 லட்சம் வசூல் செய்த அதிகாரிகள்

ஓசூர் :தமிழக அரசுக்கு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, பிற மாநில பதிவு எண் கொண்ட, 5 ஆம்னி பஸ்களுக்கு, 1.77 லட்சம் ரூபாய் வரி விதித்து வசூலிக்கப்பட்டது.கர்நாடகா மாநிலத்தில் இருந்து, ஓசூர் வழியாக கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில், தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக, ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் புகார் வந்தது. இதையடுத்து, ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல், நள்ளிரவு வரை ராயக்கோட்டை சாலையில், அசோக் பில்லர் அருகே வாகன சோதனை செய்தனர்.ஆம்னி பஸ்களில் சென்ற பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதனை செய்த போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை என, பயணிகள் தெரிவித்தனர். ஆனால் கர்நாடகா, கேரளா, நாகாலந்து மாநில பதிவு எண் கொண்ட, 5 ஆம்னி பஸ்கள் தமிழக அரசுக்கு வரி செலுத்தாமல் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து மொத்தம், 1.77 லட்சம் ரூபாய் வரி விதிக்கப்பட்டு, உடனடியாக வசூல் செய்து விட்டு பஸ்களை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை